மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் அருகே, டிராக்டர் மோதி போலீஸ்காரர் பலி

டிராக்டர் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரியை சேர்ந்தவர் திருமலைக்குமார். விவசாயி. இவரது மகன் பார்த்தசாரதி (வயது 25). இவர் மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு முடுவார்பட்டியிலிருந்து தேவசேரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பார்த்தசாரதி உயிரிழந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். இறந்த பார்த்தசாரதிக்கு திருமணம் ஆகவில்லை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்