மாவட்ட செய்திகள்

ஆரோவில் அருகே சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

ஆரோவில் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் விக்கி என்கிற அய்யப்பராஜ் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி, புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்நிலையில் நேற்று காலை சொந்த வேலை காரணமாக புதுச்சேரிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் விக்கி புறப்பட்டார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், விக்கியிடம் சென்று தங்கள் மகளை கோரிமேட்டில் உள்ள பள்ளியில் விட்டுச்செல்லுமாறு கூறி விக்கியுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தனர்.

அப்போது பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த சிறுமியிடம் விக்கி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை பற்றி சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் விக்கி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...