மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே வாகனம் மோதி மின்வாரிய ஊழியர் பலி

சின்னசேலம் அருகே வாகனம் மோதியதில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னசேலம்,

சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்தவர் சாமிசகஜானந்தம் (வயது 52). இவரது மனைவி இந்திரா காந்தி(47). சாமிசகஜானந்தம் பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற அவர், மாலையில் மோட்டார் சைக்கிளில் சின்னசேலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சின்னசேலம் அருகே தோட்டப்பாடியில் உள்ள தனியார் விதை பண்ணை அருகில் சென்ற போது, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று சாமிசகஜானந்தம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சாமிசகஜானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சாமிசகஜானந்தம் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இந்திராகாந்தி கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...