சிவகிரி,
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகிரி அருகே வந்த 2 டிராக்டர்களை மறித்து சோதனை செய்தனர். அதில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சிவகிரி அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் இருந்து 2 டிராக்டர்களில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புதூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ஈஸ்வரன் (வயது 44), மற்றொருவர் அதே ஊர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாலு மகன் கண்ணன் (23) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் 2 மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மணலுடன் 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளரான அய்யப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.