மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருகே, மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

திருவண்ணாமலை அருகே மாயமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த வேளானந்தல் பகுதியை சேர்ந்தவர் கந்தன். அவருடைய மகள் மகாலட்சுமி (வயது 20). இவர், கடந்த 17-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊசாம்பாடியில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்த இளம்பெண், மகாலட்சுமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்