மாவட்ட செய்திகள்

திருவோணம் அருகே, ஆற்றில் தவறி விழுந்த விவசாயி பிணமாக மீட்பு

திருவோணம் அருகே ஆற்றில் தவறி விழுந்த விவசாயி நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தெற்கு ஊராட்சி இடையாத்தி பட்டுக்கோட்டையான் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் குமரவேல் (வயது 45) விவசாயி. இவர், மனைவி ரேவதி, மகன் ஜெனின்குமார், மகள் ஜெனிபர் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் குமரவேல் நேற்று முன்தினம் காலை கல்லணைக்கால்வாய் எனும் புதுஆற்றில் இடையாத்தி பாலம் அருகே கை, கால்களை கழுவி கொண்டிருந்தார். அப்போது குமரவேல் எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை கண்டு பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் குமரவேல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய குமரவேலுவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் செருவாவிடுதி வடக்கு கிளை வாய்க்காலில் நேற்று குமரவேலு பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருவோணம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...