மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் அருகே, மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல் - ஜோதிடர் உள்பட 2 பேர் பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதியதில் ஜோதிடர் உள்பட 2 பேர் பலியாகினர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள டி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). ஜோதிடர். இவர் நேற்று முன்தினம் இரவு மாரம்பாடியில் கடையில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வேடசந்தூர்-மாரம்பாடி செல்லும் சாலையில் மல்வார்பட்டி அருகே சென்றபோது எதிரில் மல்வார்பட்டியை சேர்ந்த ஆவிளியப்பன் (50) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், சுரேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆவிளியப்பன் இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்