மாவட்ட செய்திகள்

உழவு தொழில் வளர்ச்சிக்கு உன்னத திட்டங்கள்

இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈர்ப்பதற்கும் யோசனைகளை தெரிவிப்பதற்காக இந்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை அமைத்தது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக விவசாயக் குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விவசாயம் ஆதாயம் தரும் தொழிலாக மாறுவதற்கும், இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈர்ப்பதற்கும் யோசனைகளை தெரிவிப்பதற்காக இந்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை அமைத்தது.

அப்போதைய வேளாண் துறை மந்திரியான ராஜ்நாத்சிங் இந்த ஆணையத்தை அமைத்தார். சரத்பவார் என்னை இந்த ஆணையத்திற்கு தலைமையேற்குமாறு அழைத்தார். இந்த ஆணையம் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான யோசனைகளைத் தெரிவிக்கும் அறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி வேளாண் குடும்பங்களின் பொருளாதார நலன்களை பேணிக்காப்பதற்கான பரிந்துரைகளையும் தெரிவித்தது.