தஞ்சாவூர்:
தஞ்சை நகர பகுதிகளில் மின்தடை குறித்து புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை புகார்கள்
தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட மின்பயனீட்டாளர்கள் மின்தடை மற்றும் இதர புகார்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கபெருமாள்கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் 9445853751 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
கீழவாசல் பகுதி
மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடம் நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை, சிட்கோ, கருணாவதிநகரை சேர்ந்தவர்கள் 9445853761 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சீனிவாசபுரம், கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, மேற்கு அலங்கம், கீழவாசல், பாம்பாட்டி தெரு, காந்திஜி சாலை, அண்ணாசாலை, நீதிமன்ற சாலை, சாந்தப்பிள்ளை கேட், கல்லணைக்கால்வாய் சாலை, ரெயிலடி, பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் 9445853736 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
கீழவாசல் மார்க்கெட் பகுதி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், நாகை ரோடு, பெரிய சாலை ரோடு, ராமேஸ்வரம் சாலை, ஆடக்காரத்தெரு, ஆட்டுமந்தை தெரு, மகர்நோன்புச்சாவடி, வாடிவாசல் தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, மேக்ஸ்வெல்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் 9445853735 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
அருளானந்த நகர்- கணபதி நகர்
அண்ணாநகர், அருளானந்தநகர், பழைய வீட்டுவசதி வாரியம், ஐஸ்பேக்டரி, மணிமண்டபம், பரிசுத்தம் நகர், பிலோமினாநகர், புதுக்கோட்டை சாலை, சாந்தி சாலை, வ.உ.சி.நகர், அன்புநகர், அண்ணாநகர், அருளானந்தம்மாள் நகர், பாத்திமாநகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இருபதுகண்பாலம், கோரிக்குளம், குடோன் மாதா கோவில், யாகப்பா லாட்ஜ், யாகப்பா நகர், தொழிற்பேட்டை, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பகுதியை சேர்ந்தவர்கள் 9445853738 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
தமிழ்நகர், ஈஸ்வரி நகர், பவானி நகர், சுந்தரம் நகர், மகேஸ்வரி நகர், பெரியார் நகர், இந்திரா நகர், தேவன்நகர், எழில் நகர், சங்கம் நகர், முனிசிபல் காலனி, டி.பி.எஸ். நகர், பாலாஜி நகர், கண்ணன் நகர், கணபதி நகர், செல்வம் நகர், விக்டோரியா காலனி, பிரபா நகர், ரெயில் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, நடராஜபுரம் தெற்கு, முத்தமிழ்நகர், ஏ.ஆர்.எஸ்.நகர், விவேகானந்தா நகர், எல்.ஐ.சி. காலனி, பொன்நகர், துவாரகா நகர், கூட்டுறவு காலனி, துளசியாபுரம், தென்றல் நகர், சீனிவாசாநகர், மாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 9445853733 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
அரண்மனை பகுதி
பூக்குளம், கரந்தை, பாலோபநந்தவனம், ஏ.வி.பதி நகர், வடக்கு வாசல், டவுன் போலீஸ் சாலை, செல்லியம்மன் கோவில், பள்ளியக்ரகாரம், சுங்கான்திடல், ராஜராஜசோழன் நகர், சுண்ணாம்புகால்வாய் சாலை, சி.ஆர்.சி. டெப்போ பகுதி, கரந்தை தமிழ்சங்கம், மந்தாரடி தெரு, வலம்புரி நகர், மேல குருவிக்கார தெரு, பத்துக்கட்டு, குளத்துமேட்டு தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் 9445853734 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
வடக்கு வீதி, சாலைக்கார தெரு, குயவர் தெரு, டபீர்குளம் சாலை, ஒற்றை வார்க்கார தெரு, இரட்டைவார்க்கார தெரு, டவுன் போலீஸ் ஸ்டேசன் சாலை, டவுன் கரம்பை, பூமால் ராவுத்தர் கோவில் தெரு, குறிச்சி சுப்பிரமணி தெரு, கொண்டிராஜபாளையம், பீரங்கிமேடு சாலை, அரண்மனை பகுதியை சேர்ந்தவர்கள் 9445853739 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இலவச தொலைபேசி எண்
மேலும் நகர உதவி செயற்பொறியாளர் 9445853732, செயற்பொறியாளர் 9445853731 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மின் தொடர்பான புகார்களுக்கு 1912 மற்றும் 9498794987 மின்னகம் என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.