மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி அருகே நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி கண்மாய் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதையடுத்து கோவில்பட்டி தாசில்தார் அமுதா தலைமையில் மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்துசேகர், மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றி முழுமையாக மீட்கும் பணி வருகிற 3-ந்தேதிக்குள் முடிவடையும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித் தனர்.