மாவட்ட செய்திகள்

2024-ம் ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும் - மத்திய மந்திரி உறுதி

2024-ம் ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்.

தானே,

மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் பட்டீல், மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பற்றி குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, வெங்காயம் விலையையும், உருளைக்கிழங்கு விலையையும் குறைப்பதற்காக பிரதமர் ஆகவில்லை. அதிக விலைக்கு மட்டனையும், பீட்சாவையும் வாங்கும் மக்கள், வெங்காயம் விலையை குறை கூறுகிறார்கள். இந்த விலை உயர்வுக்கான காரணத்தை புரிந்து கொண்டால், மோடியை குறைகூற மாட்டார்கள்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரால்தான் சில விஷயங்களை சாதிக்க முடியும். குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற துணிச்சலான முடிவுகளை பிரதமர் எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து நாட்டை ஆள வேண்டும். 2024-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...