மாவட்ட செய்திகள்

ஒலிம்பியன் ஏர் ரைபிள் அகாடமி சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

புதுவை ஒலிம்பியன் ஏர் ரைபிள் அகாடமி சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

புதுச்சேரி,

பாண்டிச்சேரி சூட்டிங் அசோசியேஷன், புதுவை ஒலிம்பியன் ஏர் ரைபிள் அகாடமி சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள், 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என மொத்தம் 42 பேர் பங்கேற்றனர். போட்டியை பார்த்திபன் ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி சூட்டிங் அசோசியேஷன் சங்க செயலாளர் ரவீந்திரன், இணை செயலாளர்கள் கிஷோர்குமார், பீர் முகமது உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...