மாவட்ட செய்திகள்

புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சிறந்த தமிழ் படைப்புகள் இந்தியில் மொழி பெயர்ப்பு - துணைவேந்தர் குர்மீத் சிங் தகவல்

தமிழ் மொழியில் உள்ள சிறந்த படைப்புகள் பல்கலைக்கழகம் சார்பில் இந்தியில் மொழிபெயர்க்கப்படும் என்று துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார்.

தினத்தந்தி

காலாப்பட்டு,

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் வயது மூப்பு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அவரது படத்திறப்பு விழா புதுவை பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் புலத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கினார். நடிகர் சிவக்குமார், செயப்பிரகாசம், புல முதன்மையர் இளமதி ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணவதி அம்மாள் படத்தை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் திறந்துவைத்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஏற்புரை ஆற்றினார். வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக பதிவாளர் சித்ரா, பேராசிரியர் ரவிக்குமார் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் பேசுகையில், உலகில் மிகவும் தொன்மையான மொழி தமிழ். இந்த மொழியில் ஏராளமான படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிறந்த படைப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை விரைவில் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றார். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நினைவுப் பரிசு வழங்கினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை