மாவட்ட செய்திகள்

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

செங்குன்றம்.

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் மண்டபம் ரோட்டில் உள்ள 6-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). பி.காம் பட்டதாரியான இவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையக குடோன் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியை சேர்ந்த தனது நண்பரான கல்லூரி மாணவர் ரஞ்சித் (20) என்பவருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள வரதையாப்பாளையம் நீர் வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் தினேஷ் சென்றார். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டிச்சென்றார். ரஞ்சித் பின்னால் அமர்ந்து சென்றார்.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெத்திக்குப்பம் மேம்பால சந்திப்பில் செல்லும் போது சாலையின் திருப்பத்தையொட்டி நடுவில் இருந்த சிமெண்டு தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற தினேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ரஞ்சித் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...