மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது