மாவட்ட செய்திகள்

பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம்

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடல்களை வாங்க மறுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பனப்பாக்கத்தை சேர்ந்த மாணவிகள் மனிஷா, தீபா, சங்கரி, ரேவதி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் காத்திருந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கோ.அரி அங்கு வந்து மாணவிகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. அப்போது, அரக்கோணம் இன்ஸ்பெக்டர் நாகராஜ், மருத்துவமனையில் காத்திருந்த மாணவிகளின் பெற்றோர்களை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களிடம் தலைமைஆசிரியை ரமாமணி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து பகல் 11 மணி அளவில் மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. ஒன்றன்பின் ஒன்றாக பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. பின்னர் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோரிடம், தலைமை ஆசிரியை விளக்கம் அளித்த பின்னர் போலீசார் மாணவிகளின் பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மதியம் 12 மணி அளவில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வேலூர் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குத்தாலிங்கம் (அரக்கோணம்), விஜயகுமார் (ராணிப்பேட்டை), ஆரோக்கியம் (வேலூர்) ஆகியோர் வந்தனர். அப்போது மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் திடீரென அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாணவிகளின் பெற்றோர், எங்களை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டு, எங்களுக்கு தெரியாமலேயே எங்கள் மகள்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளர்கள். எங்களுக்கு தெரியாமலேயே அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீங்களாக முடிவு செய்து பிரேத பரிசோதனையை செய்ததுபோல், எங்கள் மகள்களின் உடல்களையும் நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள். நாங்கள் உடல்களை வாங்க மாட்டோம் என்றனர்.

பிற்பகல் 2 மணிக்குள் 4 மாணவிகளின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், வேலூர் உதவி கலெக்டர் செல்வராசு, தாசில்தார் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து இறந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர், மாணவிகளின் உடல்களுக்கு கலெக்டர் ராமன் மலர் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவிகள் தீபா, சங்கரி, ரேவதி, மனிஷா ஆகியோர் உடல்கள் வரிசையாக அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் மாணவிகளின் உடல், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்