மாவட்ட செய்திகள்

பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் வீணாகும் குடிநீர்

பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் குடிநீர் வீணாகிறது. அந்த தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து காங்கிரீட் தூண்களில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடுபோல் காணப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் கசிந்து வீணாகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.

ஆகவே பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...