கரூர்,
காதல்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அந்த மாணவிக்கும் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அந்த மாணவியை குமார் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்த தகவல் மாணவி வசித்து வரும் பகுதியை சேர்ந்த மெக்கானிக்கான மாரிமுத்து (35) என்பவருக்கு தெரிந்துள்ளது.
போக்சோவில் கைது
இதையடுத்து மாரிமுத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மெக்கானிக் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவான குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.