கரூர்,
கரூர் அருகே உள்ள கந்தசார பட்டியை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம் (வயது 20), டெய்லர். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், மாணிக்கசுந்தரம் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.