மாவட்ட செய்திகள்

சேத்தூர், துலுக்கப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

சேத்தூர், துலுக்கப்பட்டி பகுதியில் இன்று மின்தடை சய்யப்படுகிறது.

ராஜபாளையம்,

சேத்தூர், துலுக்கப்பட்டி பகுதியில் இன்று மின்தடை சய்யப்படுகிறது.

சேத்தூர்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஆதலால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

துலுக்கப்பட்டி

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆதலால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், கணபதி மில் குடியிருப்பு தென்பகுதி, ஒண்டிப்புலி, நாயக்கனூர், வேல சின்னையாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.