மாவட்ட செய்திகள்

அதிகாலையில் 4½ மணி நேரம் மின்தடை

வத்திராயிருப்பு பகுதியில் அதிகாலையில் 4½ மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் அதிகாலையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திடீர் மின்தடை

வத்திராயிருப்பில் துணை மின் நிலையம் மகாராஜபுரம் செல்லும் சாலையில் ஆகாசம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து வ.புதுப்பட்டி, அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு நகர் முழுவதும் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 7.30 மணி வரை திடீரென மின்தடை செய்யப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்பட அனைவரும் பெரிதும் சிரமப்பட்டனர்.

தற்காலிக ஊழியர்கள்

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அர்ச்சுனாபுரம் செல்லும் மின் வழிப்பாதையில் பழுது ஏற்பட்டதாகவும், மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் தற்காலிக ஊழியர்களை கொண்டு பழுது நீக்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆதலால் அதிகாலையில் 4 மணி நேரம் தடை ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.