மாவட்ட செய்திகள்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வின்சென்ட் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில துணை தலைவர் ஜோசப்ரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஜாக்டோ-ஜியோவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்