மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் சாவு

தனியார் நிறுவன ஊழியர் சாவு

பொள்ளாச்சி

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஹரிகரன்(வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் ஒரு தனியார் அமைப்பிலும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த 17 பேர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறுக்கு இன்று சுற்றுலா வந்தனர்.

பின்னர் அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் இறங்கி குளித்தனர். அப்போது ஹரிகரன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனே அவருடன் வந்தவர்கள் ஹரிகரனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...