மாவட்ட செய்திகள்

நெரும்பூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு

நெரும்பூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நெரும்பூர் கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராம பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் அளித்த தகவலின் மூலம் கிராமப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் அறிந்தோம்.

இந்த பகுதியில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் கடையில் பல்வேறு திருட்டு மற்றும் கலாச்சார சீரழிவு நடைபெற்றது. விபத்துக்களைத் தடுக்கும் வகையில் அப்போது அரசு நெரும்பூர் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றியது.

எனவே மீண்டும் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பல்வேறு பிரச்சினைகள் நடைபெறும். இதுகுறித்து கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...