மோட்டார் சைக்கிளில் வந்தார்
சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். புதுவை திலாசுப்பேட்டை விநாயகர் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அங்கு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அவர் ஓட்டுப் போட்டார். அதன்பின் தான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:-
நான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பாவையிட்டேன். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆாவமுடன் வாக்களித்து வருகிறாகள். இந்த தோதலில் எங்கள் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
கடந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது மக்கள் அனைவருக்கும் தொயும். இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே என்.ஆா.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவா கூறினா.