மாவட்ட செய்திகள்

அரூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

அரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் வீட்டில் தனியாக இருந்த போது மத்தியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன் (27) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை, அவர் மிரட்டியுள்ளார். இதனால் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது ஆசிரியரிடம் கூறியுள்ளாள். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினார். இதையடுத்து சிறுமியின் தாயார் அரூர் அனைத்து மகளிர் பாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...