மாவட்ட செய்திகள்

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு

சென்னை வில்லிவாக்கத்தில் பிரசித்திபெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான 6 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. ஆனால் வாடகைதாரர்கள் பல வருடங்களாக கோவிலுக்கு வாடகை பாக்கியை செலுத்தவில்லை.

தினத்தந்தி

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து வாடகை தராத 6 கடைகளுக்கும் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த கடைகள் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை