மாவட்ட செய்திகள்

மனஅழுத்தத்தை குறைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும், பணிபுரியும் இடம் மற்றும் குடும்ப சூழ்நிலைகளினால் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மன அழுத்த குறைப்பு குறித்த பயிற்சி பெங்களூருவை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் மூலமாக அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

மனஅழுத்த குறைப்பு பயிற்சியை முடித்தவர்கள் மூலமாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி ஆயுதப்படை அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. காவலர் நிறைவாழ்வு பயிலரங்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் இந்த பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

இந்த பயிற்சி முகாமில் மனநல ஆலோசகர் கற்பகம் தலைமையிலான குழுவினர் பங்கேற்று போலீசாருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மனஅழுத்தம் ஏற்பட்டால் அதை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளித்தனர். மனஅழுத்தம் ஏற்படுவதற்கான சூழல்கள் ஏற்படும்போது அதை எதிர்கொள்ளும் முறை குறித்தும் எடுத்து கூறினார்கள். இந்த பயிற்சி முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் காந்தி, மணிகண்டன் உள்பட தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 40 போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு