மன்னார்குடி,
மன்னார்குடி வர்த்தகர் சங்க சிறப்பு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ஏ.பி.அசோகன் வரவேற்றார். கூட்டத்தில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மன்னார்குடி மாவட்டம்
மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி வலங்கைமான் ஆகிய பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
பாலிதீன் பைகளை ஒழிக்க முழு ஒத்துழைப்பு அளிப்பது. காரோனா கால ஊரடங்கின்போது திறக்கப்படாத திருமண மண்டபங்கள், ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும். வணிக பகுதிகள் மட்டுமின்றி வீடுகளிலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், வர்த்தக சங்க துணைத்தலைவர் ஊமைத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.