மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2-ம் தவணையாக ரூ.30 லட்சம் நிவாரணம் - தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டது

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 2-ம் தவணையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் தவணையாக ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் தவணையாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 10 டன் அரிசி மூட்டைகள், போர்வைகள், தலையணைகள், வேட்டி- சேலைகள், பேண்ட், சட்டைகள், ஸ்டவ் அடுப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ் கெட்டுகள், பாய்கள் என ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை லாரி மூலம் அனுப்பினார்.

இந்த நிவாரண பொருட்கள் திருச்சியில் உள்ள மாவட்ட செயலாளர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கலைஞர் பகுத்தறிவு பாசறை செயலாளர் பிரபாதண்டபாணி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, வக்கீல் சுவைசுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை