பாவூர்சத்திரம்
ஆலங்குளம் முதல் நெட்டூர் வரை செல்லும் 10 கிலோமீட்டர் சாலை சேதம் அடைந்து இருந்தது. அந்த சாலை குறுகலாகவும் இருந்தது. அந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபாகரன் எம்.பி.யிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.17 கோடியே 84 லட்சம் செலவில் அந்த சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி, சாலைப்பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். பிரபாகரன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெட்டூரில் சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளின் படி ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி செய்து தருவதாக பிரபாகரன் எம்.பி. கூறினார்.
ஆலங்குளம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சண்முகவேலு, குருவன்கோட்டை கிளை செயலாளர் கார்த்திகேயன் என்ற கப்பல்ராஜா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மப்பாண்டி, சுப்பையா என்ற ராஜ், பாண்டியராஜன், முத்தரசு, வீரபுத்திரன், தேன்ராஜ், திருஞானம், முருகையா பாண்டியன், செல்லப்பா, வீரபாண்டியன், பிரின்ஸ் மணிராஜ், கருப்பசாமி பாண்டியன், லால், செல்லப்பா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.