கயத்தாறு:
கடம்பூர் நாராயணசாமி கோவிலில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் மாலையில் ஊர் விளையாடுதல் நடைபெற்றது. இரவில் சிறப்பு பணிவிடைக்கு பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
2-ம் நாள் காலையில் அய்யா சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சிறப்பு பணிவிடையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.