கோப்பு படம் 
மாவட்ட செய்திகள்

உத்தவ் தாக்கரே- அம்ருதா பட்னாவிஸ் இடையே வாக்குவாதம் கூடாது- தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்

உத்தவ் தாக்கரே- அம்ருதா பட்னாவிஸ் இடையே கடுமையான வாக்குவாதம் கூடாது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

உத்தவ் தாக்கரே- அம்ருதா பட்னாவிஸ் இடையே கடுமையான வாக்குவாதம் கூடாது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

வார்த்தை போர்

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் டுவிட்டரில் எப்போதும், சிவசேனா தலைமையிலான மராட்டிய அரசை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அந்த மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் இருந்து ஒலிப்பெருக்கிகளை சமீபத்தில் நீக்கியது தொடர்பான செய்தி வெளியானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்ருதா பட்னாவிஸ், ஓ இன்பம் தேடுபவரே, எங்கள் யோகியிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அம்ருதா பட்னாவிசை கேலி செய்யும் வகையில், மாநிலத்தின் தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவா பாடுகிறார் என்பதை அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இன்றுவரை நான் ஒரே ஒரு பாடகர் மட்டுமே இருக்கிறார் என்று நினைத்தேன் என கூறியிருந்தார்.

அம்ருதா பட்னாவிஸ் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதை குத்திகாட்டும் வகையில், இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியிருந்தார்.

இதனால் அவர்ளுக்குள் வார்த்தை போர் நீண்டது.

தலையிட மாட்டேன்...

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும், எனது மனைவிக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. உத்தவ் தாக்கரே கேலி செய்வதை நிறுத்தவில்லை. என் மனைவி அதற்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்தவில்லை.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தனது உயர்ந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஏதாவது சொன்னால், எனது மனைவி பதலளிக்கக்கூடாது. இதுபோன்ற விஷயங்களை புறக்கணிக்க வேண்டும். ஆனாலும், அது அவர்களுக்கிடையேயான பிரச்சினை, அதில் நான் தலையிட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...