மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றாததால் புதுவையில் மருந்துக்கடைக்கு சீல்

விதிமுறைகளை பின்பற்றாததால் புதுவையில் மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது கோவில்கள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதனால் அந்த மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதே பகுதியில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான குறியீடு போடாததால் ஐஸ்கிரீம் விற்கும் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை