மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதெடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் பொள்ளாச்சியில் இருந்து நடுப்புணி செல்லும் சாலையில் செந்தாம்பாளையம் பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சரக்கு வாகனத்தில் 50 கிலோ எடைகொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த டிரைவர் ராஜா மன்சூர் அலி (வயது 38), மணிகண்டன் (35), சக்திவேல் (36) என்பதும், ரேஷன் அரிசையை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தி சரக்கு வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...