தொண்டி
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு உள்ள அரசு மதுபான கடை அருகில் அனுமதியின்றி மதுபானம் விற்பது தொடர்பாக போலீசார் தொண்டியை அடுத்த கொடிப்பங்கு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (வயது 34) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 35. மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.