மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கடத்தப்பட்ட ரூ44 ஆயிரம் புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் பறிமுதல் சரக்கு வேன் டிரைவர் கைது

பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கடத்தப்பட்ட ரூ44 ஆயிரம் புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 33 கிலோ இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.41 ஆயிரம் ஆகும்.

அதேபோல ரூ.3 ஆயிரத்து 875 மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றையும், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா முள்ளுகாடு இந்திரா நகரை சேர்ந்த அஜித் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.