மாவட்ட செய்திகள்

439 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 439 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில், மேற்கு போலீஸ் நிலையம் அருகில், மாலை பேட்டை தெரு, சிவகாசி ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக வள்ளியூரை சேர்ந்த மோகன் (வயது 37), எரிச்சநத்தத்தைச் சேர்ந்த வீராச்சாமி (43), ரோசல்பட்டியைச் சேர்ந்த ராமசாமி (36) ஆகிய 3 பேரிடமிருந்தும் ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள 439 மது பாட்டில்களை பறிமுதல் செய்த இந்நகர் மேற்கு போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.