மாவட்ட செய்திகள்

சுய உதவி குழுக்கள் குவாரி குத்தகை உரிமம் பெறலாம் - கலெக்டர் தகவல்

சுய உதவி குழுக்கள் குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கல்குவாரிகளுக்கு 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி பொன்விழா கிராம சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் களால் அமைக்கப்பட்ட சங்கம் ஆகியவற்றிக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக குத்தகை உரிமம் வழங்கப்பட உள்ளது.

எனவே குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் உரிய படிவங்களை இணைத்து நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 5 மணிக்குள் உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சிவகங்கை என்ற விலாசத்திற்கு நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ கொடுக்கலாம்.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு மாவட்ட உதவி இயக்குனர் சுரங்கத்துறை, சிவகங்கை அலுவலகத்தில் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...