மாவட்ட செய்திகள்

குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி கட்டிட மேஸ்திரி பலி

குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.

தர்மபுரி,

தர்மபுரியை சேர்ந்தவர் பூபதி (வயது 34). கட்டிட மேஸ்திரியான இவர் தர்மபுரியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் அந்த கிணற்றில் பூபதியின் உடல் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் குளித்தபோது கிணற்று நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...