மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

கடலூர்,

ஏசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.15 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் ஆலயத்தின் வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ் வைத்தார்.அதன் பிறகு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

புத்தாடை அணிந்து தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு 11.40 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டது. அதற்கு முன்பாக ஆலயத்துக்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டனர்.

ஆலயம் திறந்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆலயம் நுழைவு வாசலில் வைக்கப் பட்டிருந்த சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். அனைவரும் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். மற்ற தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெறுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை