மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் விழா தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிருஷ்ணகிரி:

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்தவர்களால் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயேசுவின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

வாழ்த்துக்கள் பரிமாற்றம்

தொடர்ந்து, தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டனர்.

இதே போல மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பர்கூர்

பர்கூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜெகத்ரட்சகர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவையொட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.