மாவட்ட செய்திகள்

பெரம்பலூ மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூ மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

தைப்பூச திருவிழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 41-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாலமுருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை மூலவர், தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை