விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாதவராவ் போட்டியிடுகிறார். மாதவராவ் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகள் திவ்யாராவ் தந்தைக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி மசூதியில் தனது தந்தைக்கு கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாதவராவ் வெற்றி பெற வேண்டி மசூதியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இஸ்லாமியர்களிடம் பேசிய வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யாராவ் தனது தந்தை வெற்றி பெற்றால் கண்டிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பார் எனவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பார் எனவும் உறுதியளித்தார்.