மாவட்ட செய்திகள்

கல்லாவி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லாவி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லாவி:

கல்லாவி அருகே உள்ள கரியம்பதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 20). தனியார் கல்லூரியில் இளநிலை 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடினார். இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தகுமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

==========