புதுக்கோட்டை,
2017-18 கல்வி ஆண்டில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா மற்றும் நிர்வாகிகள் கார்த்திகாதேவி, சந்தோஷ், நித்திஷ்குமார், வைஷ்ணவி, வைரமணி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கைகள் அடங்கி மனுவை சங்கத்தின் சார்பில் அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.