கரூர் 
மாவட்ட செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நொய்யல்,

நொய்யல் அருகே நடையனூரில் உள்ள அரசு உதவி பெறும் அரங்கசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்தாம் வகுப்பு முடித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் புஷ்பா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களையும் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கல்வி, ஒழுக்கம் மற்றும் பல நற்பண்புகளை புகட்டிய பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கினார்கள். மேலும் பள்ளியில் பனியாற்றிய ஆசிரியர்கள் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...