மாவட்ட செய்திகள்

சிவகிரியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிவகிரி,

சிவகிரி அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). கூலி தொழிலாளி. இவர் சிவகிரி அருகே செந்தட்டியாபுரம் புதூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

குடும்ப தகராறு காரணமாக, சீனிவாசனை அவருடைய மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சீனிவாசன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சீனிவாசன் சம்பவத்தன்று விஷம் குடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...