விராலிமலை:
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் கலர்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 47). இவர் கடந்த 20 வருடங்களாக விராலிமலை அருகே உள்ள எரங்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மகன் பார்த்தசாரதி (18). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காயத்தின் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பார்த்தசாரதி நேற்று பூதகுடியில் விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.