மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் நீச்சல், ஜூடோ விளையாட்டு போட்டிகள் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சேலம் மண்டல அளவிலான நீச்சல் மற்றும் ஜூடோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி,

சேலம் மண்டல அளவிலான நீச்சல் போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிலும், ஜூடோ விளையாட்டு போட்டி தனியார் பள்ளியிலும் நடந்தது. விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளில் சங்ககிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நடுவர்களாக கிருஷ்ணகிரி அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு செய்திருந்தார்.

நீச்சல் போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். ஜூடோ போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கலந்து கொள்வார்கள் என உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...